தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் இதன் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த வைரஸ் கிருமியை கட்டுப்படுத்த வீதி வீதியாக சென்று கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது என பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சி அறிவித்து வருகிறது.
இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து யாரும் வெளியில் செல்லவே, உள்ளே நுழையவோ அனுமதி கிடையாது. அங்குள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாநகராட்சி அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகிறது.
இந்நிலையில், சென்னையில் மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதியின் விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில், சென்னை முழுவதும் 104ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 102ஆக குறைந்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரம்:
தண்டையார்பேட்டை - 50
திருவிக நகர் - 3