சென்னை விமான நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்தவர் முருகன் (41). இவருக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்ட் தாமஸ் மவுண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
சென்னை விமான நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு! - சென்னை விமான நிலையம்
சென்னை: விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் முருகன் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
![சென்னை விமான நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:57:10:1596274030-tn-che-02-policedeath-photo-script-7208368-01082020113823-0108f-1596262103-591.jpg)
சென்னை விமான நிலையம்
இந்நிலையில், இன்று(ஆக.1) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரின் உடல் உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் உயிரிழப்பு விமான நிலைய காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.