குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்வதற்காக திருச்சி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ரூ. 25.53 கோடி மதிப்பீட்டிலான கட்டடங்களை முதலமைச்சர் திறந்துவைப்பு - அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி,
திருச்சி: கல்வி, சட்டம் உள்ளிட்ட துறைகளுக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து ரூ. 23.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளிக் கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை , மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களை திறந்துவைத்தார். அதன்பின், திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரையும் சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.