தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது.
மத்தியக் குழு நாளை சென்னை வருகை!
சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்ய மத்தியக் குழு நாளை சென்னை வரவுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்ய பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் மத்தியக் குழு நாளை மாலை சென்னைவருகிறது. மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான குழு தமிழ்நாட்டில் தொற்று பரவல், உயிரிழப்பு, கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தவுள்ளது. மேலும், கரோனா நிலவரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.