தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் - வைகோ - MDMK Chief Vai Gopalswamy

சென்னை : தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் - வைகோ
தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் - வைகோ

By

Published : Jul 14, 2020, 7:11 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது.

நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளின் தேர்தல்களை எவ்வித சார்பும் இன்றி, சீரிய முறையில் நடத்துவதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.

தற்போது பா.ஜ.க. அரசு ‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2019’ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2020’ ஆகியவற்றை கொண்டுவந்துள்ளது. இச்சட்டத் திருத்தத்தின்படி மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 80 வயதிலிருந்து 65 வயதாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் அஞ்சல் வாக்குச் சீட்டுப் போடுவதற்கு தகுதியானவர்கள் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்யுமா? என்பது கேள்விக் குறி.

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது, 65 வயதுக்கு மேல் என்று வாக்காளர்கள் பதிவு செய்தால், பதிவு செய்யும் அலுவலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைதான் இருக்கும். இதனால் அஞ்சல் வாக்குச் சீட்டு அளிப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இன்னொரு திருத்தத்தின் மூலம் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர் என்ற சான்றிதழ் பெற்றவர்களும், கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரியவர்களும் அஞ்சல் வாக்குச் சீட்டைப் பதிவு செய்யலாம் என்பதும் பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்.

தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டு, திருத்தங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஆளும் கட்சியின் அழுத்தங்களுக்குப் பணிந்துவிடக் கூடாது.

எனவே, மத்திய அரசு நடத்தும் விதிமுறைகளில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details