மனித செல்களில் வெளிப்புறப் பகுதியில் உள்ளது மெம்ரேன். இந்த மெம்ரேன் மனித செல்களின் பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. வலி நிவாரணம் முதல் வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பு வரை அனைத்தையும் மெம்ரேன் கட்டுப்படுத்துகிறது.
கோவிட்-19 ஆய்வுக்கு உதவும் செல் மெம்ரேன்! - கோவிட்-19 ஆய்வுக்கு உதவும் செல் மெம்ரேன்
மனித செல்லில் உள்ள மெம்ரேனை சிப்பில் செலுத்தப்படுவதால் மருந்துகள் மற்றும் வைரஸ் நமது செல்களில் நுழைந்ததும் எப்படி தாக்குகிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
![கோவிட்-19 ஆய்வுக்கு உதவும் செல் மெம்ரேன்! Cell 'membrane on a chip' may speed up screening of COVID-19 drugs](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:19:11:1594378151-virus-0707newsroom-1594124308-296.jpg)
Cell 'membrane on a chip' may speed up screening of COVID-19 drugs
இந்த மெம்ரேன் ஆய்வகத்தில் வளர்க்கப்படுகிறது. பின்னர், மெம்ரேனை சிப் மீது செலுத்தப்படுவதால் மருந்துகள் மற்றும் வைரஸ் நமது செல்களில் நுழைந்ததும் எப்படி தாக்குகிறதை என்பதை தொடர்ந்து கண்காணிக்க உதவும் என இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், கார்னல் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கோவிட்-19 தொற்றுக்கு சாத்தியமான தடுப்பு மருந்துகளை சோதிக்கவும் இது பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.