தூத்துக்குடி மாவட்டத்தில், அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்களை குறைக்கும் நோக்கமாக மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் கஞ்சா, கடத்தல், திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதிலும் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், மேலும் ஒருபடியாக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் குற்ற சம்பவங்களில் பின்னணிகளை ஆராயும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஆழ்வார் திருநகர், திருச்செந்தூர் உள்பட பல்வேறு இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.