தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மதிப்பெண் மறுமதிப்பீடு ஆன்லைன் விண்ணப்பம் நிறைவு! - சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு

டெல்லி: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கான ஆன்லைன் விண்ணப்பத்தின் கால அவகாசம் இன்றுடன் (ஜூலை24) நிறைவடைந்துள்ளது.

CBSE closes online application window for re-verification of marks
CBSE closes online application window for re-verification of marks

By

Published : Jul 24, 2020, 9:34 PM IST

10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இன்றுடன் மூடியுள்ளது.

மதிப்பெண்களை மீண்டும் மறுமதிப்பீடு செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 2020 ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜுலை 24 வரை நான்கு நாள்கள் நீட்டிக்கப்பட்டது. முன்னதாக, 10 ஆம் வகுப்பு தேர்வு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மதிப்பெண்கள் சரிபார்ப்பு, மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களின் புகைப்பட நகலைப் பெறுதல், விடைத்தாள்கள் மறு மதிப்பீடு தொடர்பான முறைகள் குறித்த விரிவான செயல்முறையையும் சிபிஎஸ்இ அறிவித்தது.

10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு 91.46 ஆக பதிவாகியுள்ளது.

டெல்லி அரசுப் பள்ளிகள் தங்களது தேர்ச்சி விழுக்காட்டை இந்த ஆண்டு 82.61 விழுக்காடாக உயர்த்தியுள்ளன. கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் தேர்ச்சி விழுக்காடு 71.58 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரெஹானா பாத்திமாவின் முன்பிணை மனு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details