தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தந்தை, மகன் உயிரிழப்பு: சிபிசிஐடி ஆய்வாளர் தலைமையில் கிளைச் சிறையில் விசாரணை! - தந்தை மகன் இறப்பு குறித்து சிபிசிஐடி விசாரணை

தூத்துக்குடி: கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் கிளைச் சிறையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிபிசிஐடி ஆய்வாளர் தலைமையில் கிளைச் சிறையில் விசாரணை!
Father son dead

By

Published : Jul 1, 2020, 8:39 PM IST

தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வியாபாரி ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ்(31). இவர்கள் ஜூன் 19ஆம் தேதி சாத்தான்குளம் காவல் துறையால் கைது செய்யப்பட்டு, 20ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஜூன் 22ஆம் தேதி இரவு காவல் துறையினரால் தாக்கப்பட்டு உடல்நிலை குறைவால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ் அன்றிரவு 9 மணிக்கு உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட அவரது தந்தை ஜெயராஜ் மறுநாள் (ஜூன் 23) உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்படைக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சிபிஐ விசாரணை தொடங்கும் வரை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி தனது விசாரணையை தொடங்கியது.

தந்தை, மகன் உயிரிழப்பதற்கு முன்னதாக அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து சிபிசிஐடி ஆய்வாளர் சரவணகுமார், உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு வந்தனர். அவர்கள் தந்தை, மகன் அடைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து கிளைச் சிறை கண்காணிப்பாளர், விசாரணை நடத்தினார். மேலும், தந்தை, மகன் அடைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details