தமிழ்நாட்டில் நேற்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. தருமபுரி மாவட்டத்தில் 208 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 144 நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதால் கிராமப்புற பகுதிகளிலிருந்து விவசாயிகள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க நகரப் பகுதிக்கு வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் குவிந்த மக்கள் கூட்டம் - சமூக இடைவெளி
தருமபுரி: கிராமப்புறங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பென்னாகரம் பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.பென்னாகரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வந்தனா். பென்னாகரம் பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சில பகுதிகளில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் கடைகளில் பொருட்களை வாங்கினர். தமிழ்நாடு அரசு பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது இருப்பினும் மக்கள் அதனை கடைப்பிடிக்காமல் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.