தமிழ்நாட்டில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில், முதலில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்றது.
இடைத்தேர்தல் தம்பியை வீழ்த்திய அண்ணன் இதில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உடன்பிறந்த சகோதரர்கள் நேருக்கு நேர் போட்டியிட்டனர். அண்ணன் மகாராஜன் திமுக வேட்பாளராகவும், தம்பி லோகிராஜன் அதிமுக வேட்பாளராகவும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில், அண்ணன் தம்பிக்குள் கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பின் திமுக வேட்பாளர் மகாராஜன் 12 ஆயிரத்து 142 வாக்குகள் வித்தியாசத்தில் தனது தம்பியும், அதிமுக வேட்பாளருமான லோகிராஜனை வீழ்த்தி சட்டப்பேரவையில் காலடி எடுத்துவைக்கவுள்ளார்.
இதன் மூலம், அண்ணன் தம்பிக்குள் நடந்த அரசியல் போட்டியில், அண்ணனே வெற்றிபெற்றார். இதையடுத்து, தேர்தல் அலுவலர் கண்ணகி இத்தொகுதியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை திமுக வேட்பாளர் மகாராஜனிடம் வழங்கினார்.