கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளி திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்காக கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக தமிழ்நாடு அரசு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சி மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பை அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
இந்தத் கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு பாடம், நடக்கும் வகுப்புகள், நேரம், என்ன பாடம் என்பதற்கான பட்டியலையும், அலைவரிசை நிறுவனங்கள் குறித்த தகவலையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடக்கும் நேரம்:
2-ஆம் வகுப்பு மாலை 5 முதல் 5:30 மணி வரை
3-ஆம் வகுப்பு மாலை 5:30 முதல் 6 மணி வரை
4-ஆம் வகுப்பு மாலை 6 முதல் 6:30 மணி வரை
5-ஆம் வகுப்பு மாலை 6:30 முதல் 7 மணி வரை
இது தவிர 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும், நீட் ஜெஇஇ-க்கான வகுப்புகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன.
கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும். இதனைக் கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.