கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்படையாமல் இருக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.
கரோனா நோயாளிகளுக்கு மூலிகை பிரியாணி! - Briyani for corona patients
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு 15 மூலிகைகள் கொண்ட கலவையுடன் தயார் செய்யப்பட்ட பிரியாணி வழங்கபட்டது.
நாகர்கோவில் அருகே செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு அதிமுக சார்பில் தொடர்ந்து பழ வகைகள், நீர் சத்து கொண்ட உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் 613 நபர்களுக்கு 15 மூலிகைகள் கொண்ட கலவையுடன் தயார் செய்யப்பட்ட பிரியாணி, முட்டை, சிக்கனுடன் வழங்கப்பட்டது.
ஏற்கனவே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சரிவர உணவு கிடைக்கவில்லை என போராட்டம் நடத்தி வீடியோ வெளியிடப்பட்டது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சரிவர உணவு வழங்கப்படாத மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்து திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.