தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முட்டாள்தனமான கேப்டன்ஷிப்... சர்ஃப்ராஸ் அஹமதை சாடிய அக்தர்! - சோயப் அக்தர்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததற்கு, சர்ஃப்ராஸ் அஹமதின் மடத்தனமான கேப்டன்ஷிப்தான் காரணம் என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

முட்டாள்தனமான கேப்டன்ஷிப்

By

Published : Jun 17, 2019, 6:23 PM IST

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன் விளைவாக, பாகிஸ்தான் அணி நேற்றைய போட்டியில் டக்வொர்த் லூவிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அக்தர் தனது யூ டியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அக்தர்

அதில், "2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில், விராட் கோலி என்ன தவறு செய்தாரோ அதைத்தான், நேற்றைய போட்டியில் சர்ஃப்ராஸ் அஹமதும் செய்துள்ளார். டாஸ் வெற்றிபெற்று, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்க வேண்டும்.

அந்த வாய்ப்பை தவறவிட்டு, சர்ஃப்ராஸ் ஏன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெரிய இலக்கு ரன்களை சேஸிங் செய்யும் அளவிற்கு, நாம் ஓன்றும் திறமைவாய்ந்த அணியில்லை என்பது அவருக்கு தெரியாதா? அப்படி இருந்தும் ஏன் சேஸிங் செய்ய அவர் தீர்மானித்தார். இந்த செயல் அவரது முட்டாள்தனமான கேப்டன்ஷிப்பைதான் வெளிப்படுத்துகிறது. ஒருவேளை, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 260 ரன்களை குவித்திருந்தால்கூட, பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று இருக்கும்" என கூறியிருக்கிறார்.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தான் நாட்டின் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ”பாகிஸ்தான் அணி டாஸ் வெற்றிபெற்றால், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும்” என அந்த அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமதிற்கு அறிவுரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details