திருச்சி மாவட்டம் தொட்டியம் அலகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் விஷ்ணு தேவ் (6). பூபதியின் அண்ணன் கங்காதரன் ஆற்றில் மீன் பிடிப்பதற்காக பாப்பாபட்டி கிராமத்திலுள்ள கல் குவாரியில் இருந்து மூன்று ஜெலட்டின் குச்சிகளை வாங்கியுள்ளாா்.
இவர்களின் உறவினர்களான தமிழரசன், மோகன்ராஜ் ஆகியோருடன் இணைந்து இரண்டு ஜெலட்டின் குச்சிகளை காவிரி ஆற்றில் வெடிக்கச் செய்து மீன் பிடித்துள்ளார். மீதமுள்ள ஒரு ஜெலட்டின் குச்சியை கங்காதரன் வீட்டில் வைத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த பூபதியின் மகன் விஷ்ணு, ஜெலட்டின் குச்சியை கடித்துள்ளான். அப்போது ஜெலட்டின் குச்சி பயங்கரமாக வெடித்தது. இதில் படுகாயமடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தொட்டியம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் சிறுவனின் உடலை மணமேடு காவிாி ஆற்றங்கரையில் எரித்துவிட்டனர்.
தகவலறிந்த முசிறி டிஎஸ்பி செந்தில்குமாா் தலைமையிலானகாவல் துறையினர் விரைந்து சென்று கங்காதரன், மோகன்ராஜ் ஆகியோரை விசாரித்தனர் . மேலும் தப்பி ஓடிய தமிழரசனை தேடி வருகின்றனர்.