தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

லண்டனிலிருந்து டெல்லி வந்தவர் கொலை - கொலை வழக்கு

டெல்லி: லண்டனிலிருந்து டெல்லி பாஹர்கஞ்சில் உள்ள தனது வீட்டிற்கு வந்தவர், சந்தேகமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Murder case
Murder case

By

Published : Jul 5, 2020, 7:22 PM IST

டெல்லி பாஹர்கஞ்சில் உள்ள சுனா மண்டியைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் ஹரியானாவின் சோனிபட்டில் சதர் கோஹானாவில் வடிகால் வீசப்பட்டது.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது; "ராஜேந்திர அபோட்(68) என்பவர் ஜனவரி மாதம் லண்டனில் இருந்து டெல்லிக்கு வந்தார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், திரும்பிச் செல்ல முடியவில்லை. அவர் பஹர்கஞ்சில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். அவருடைய தாயும் சிறிது காலத்திற்கு முன்பே இறந்துவிட்டார். சில நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போனார். இது குறித்து பஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் ஜூன் 22 அன்று சோனிபாட்டுக்கு புறப்பட்டார். அந்த நேரத்தில் அவரது வீட்டில் வேலை பார்க்கும் ஹேமா அவருடன் இருந்தார். அப்போது சோனிபட்டில் உள்ள கோஹானாவுக்கு அழைத்துச் சென்று அங்கு அபோட்டை கொல்ல வேறு சிலருடன் ஹேமா சதி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஹேமா என்ற பெண் அபோட்டிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பிக் கேட்கும் பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கழுத்தை நெரித்து அவர்கள் கைகளை கட்டி அருகிலுள்ள வாய்க்காலில் அவரை தூக்கி எறிந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கணவனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஹேமா தனியாக வாழ்ந்து வந்தார். தற்போது அப்பெண்ணை தேடி வருகிறோம்" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details