தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கும்மிடிப்பூண்டியில் பாஜக இளைஞரணி அறிமுகக் கூட்டம்! - BJP youth wing meeting

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் பாஜக கிழக்கு மாவட்ட இளைஞரணி மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி ஒன்றியத் தலைவர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

BJP youth wing introductory meeting in Gummidipoondi
BJP youth wing introductory meeting in Gummidipoondi

By

Published : Aug 31, 2020, 6:57 AM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி மாவட்டத் தலைவர்கள் மற்றும் இளைஞரணி ஒன்றியத் தலைவர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், இளைஞரணி பொறுப்பாளர் பொன்.பாஸ்கர், மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையிலும் மாவட்டத் தலைவர் கே.எம்.‌வினோத்குமார் முன்னிலையிலும் அறிமுகக் கூட்டம் நடந்தது.

BJP youth wing introductory meeting in Gummidipoondi

அப்போது வினோஜ் பி. செல்வம் கூறியதாவது, 'இக்கூட்டத்தில் அதிமுக வெற்றிக்கூட்டணியுடன் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி பாஜகவின் நகர்வுகள் இருக்கும். மும்மொழி பாடத்திட்டத்தில் திமுக இரட்டைவேடம் போடுவதை தமிழ்நாடு மக்களுக்குத் தெரியப்படுத்தவும்; முகத்திரையை கிழிக்கும் வகையில் அநேக மாவட்டங்களில் திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் முன்பு மௌனப் போராட்டம் நடத்தவும் பாஜக முடிவு செய்துள்ளது.

வரும் கல்வியாண்டில் மாநில அரசின் ஒப்புதலுடன், இந்த மும்மொழி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details