தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2019, 8:00 PM IST

ETV Bharat / briefs

செயல் தலைவரை வரவேற்ற பாஜகவினர்..!

டெல்லி: பாஜக செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நாட்டாவிற்கு, அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செயல் தலைவரை வரவேற்ற பாஜகவினர்

பாஜக தேசிய தலைவரான அமித் ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களில் யாரேனும் ஒருவர் தேசிய தலைவராக பொறுப்பேற்பார் என கூறப்பட்டது. ஆனால், அமித் ஷாவே அப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவின் செயல் தலைவராக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா நேற்று நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட அவர் இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அவரை, நாடாளுமன்ற விவகாரத் தொடர்பு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பாஜக எம்.பி உள்ளிட்டோர் பூங்கோத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

இது குறித்து பாஜக செயல் தலைவர் ஜே.பி நட்டா கூறுகையில், "கட்சியை வலுமைப்படுத்த சேவகனாக அயராது உழைப்பேன். கட்சிக்காக உழைப்பதை பெரிதாக எண்ணுகிறேன். தன் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவியை தந்த பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமித் ஷா தலைமையின் கீழ் பாஜக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அந்த சாதனை மேலும் தொடரும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details