தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சீனாவுக்கு ஒரு அங்குல நிலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்! - bjp narayanan

திருவள்ளூர்: சீன விவகாரத்தில் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை கொன்ற சீனாவை மத்திய பாஜக அரசு ஒருபோதும் விடாது என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

பாஜக நாராயணன்
பாஜக நாராயணன்

By

Published : Jun 18, 2020, 10:41 PM IST

மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனை குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது மத்திய பாஜக அரசு நிறைவேற்ற முடியாத பல்வேறுச் சட்டங்களை நிறைவேற்ற இருப்பதாகவும், குறிப்பாக இஸ்லாமிய சட்டம், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடாக மாறியிருக்கிறது என்று பெருமிதம் ததும்ப பேசினார்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தினை மத்திய அரசு, இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நிறைவேற்றி இருப்பதாகவும், மாற்றுப் பாலினத்தவர்கள் உரிமை பாதுகாப்பு சட்டம் தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா போன்ற சட்டத்தை நிறைவேற்றி சாதனை நிகழ்த்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சீனா விவகாரத்தில் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் வீண் சண்டைக்கு போக மாட்டோம் வந்த சண்டையை விட மாட்டோம் என்றும் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டவர்களை கொன்ற சீனாவை மத்திய பாஜக அரசு ஒருபோதும் விடாது என்றும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details