தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பாஜக மாநில தலைவர் முருகன் சுதந்திர தின வாழ்த்து! - 74 வது சுதந்திர தினம்

சென்னை: நமது பிரதமரின் அயராத உழைப்பில் தேசத்தினை உயர்த்திட நாமும் தேசத்தை முன்னிறுத்தி, தேச நலனுக்காய் உழைப்போம் என்று பாஜக மாநில தலைவர் முருகன் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

BJP state president Murugan
BJP state president Murugan

By

Published : Aug 15, 2020, 1:39 AM IST

பாஜக மாநில தலைவர் முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பிரதமர் தலைமையில் புதிய பாரதத்தை உருவாக்குவோம். மக்களின் அடிப்படை வசதி, தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி வளர்ச்சி, சிறு குறு தொழில்களில் புதிய வேகம், விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி, நவீன கட்டமைப்பு திட்டங்கள், நேர்மையான வெளிப்படையான நிர்வாகம், என அனைத்து துறைகளிலும் இலக்கை நிர்ணயித்து, தற்சார்பு இந்தியாவை பிரதமர் உருவாக்கி வருகிறார்.

இந்தியாவின் நீண்ட நெடுங்காலமான தீர்க்கப்படாத பிரச்னைகளான காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமர் கோயில் கட்டுவது எனப் பல்வேறு பிரச்னைகள் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டு, எழுச்சி மிக்க இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை ரூ.500 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

பாஜக தலைவர் முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா உலகிற்கு வழிகாட்டியாய் திகழ்கிறது. "ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு" நல்ல அரசன் இல்லாத நாடு எவ்வளவு வளம் இருந்தாலும், அதனால் பயனடையாது அனைவரையும் அரவணைத்து, அனைவரின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபடும் நமது பிரதமரின் அயராத உழைப்பில் தேசத்தினை உயர்த்திட நாமும் தேசத்தை முன்னிறுத்தி, தேச நலனுக்காய் உழைப்போம் என்று இந்த சுதந்திர தினத்தன்று உறுதி கொள்வோம்.

தங்கள் உடல், பொருள் ஆவி என அனைத்தும் அர்ப்பணித்து, நமக்கெல்லாம் சுதந்திரம் பெற்றுத் தந்த, ஒன்றுபட்ட பாரதத்தை உருவாக்கிய தலைவர்களையும், தியாகிகளையும் நினைவு கூறி அனைவருக்கும் 74ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details