தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மயிலாடுதுறை ராமர் கோயிலுக்கு பால்குடம் எடுத்த பாஜகவினர்! - Ayothi Ramar Temple Foundation Program

நாகை: அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை ராமர் கோயிலுக்கு பாஜகவினர் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

BJP Party Members Takes Palkudam To Ramar Temple
BJP Party Members Takes Palkudam To Ramar Temple

By

Published : Aug 5, 2020, 5:29 PM IST

அயோத்தியில் இன்று (ஆகஸ்ட் 5) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதை ஒட்டி, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஸ்ரீராமர் கோயிலில் பாஜக சார்பில் காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர்.

மயிலாடுதுறை ராமர் கோயிலுக்கு பால்குடம் எடுத்த பாஜகவினர்!

இதில் பாஜக நகரத் தலைவர் மோடி கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் கருடாழ்வார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ வீரராகவ சுவாமிகள், மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details