புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 21) தொடங்கியது. ஆனால், ஆளுநர் வராததால் அவரது உரையை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சி 500க்கு பூஜ்யம் - பாஜக வழங்கிய மதிப்பெண் - பதாதைகளில் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள்
புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சியின் சாதனை 500க்கு பூஜ்யம் என்ற பேனருடன் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்கள் பதாதைகளை ஏந்தியவாறு வந்தனர். அதில், 2016 முதல் 2020 வரை புதுச்சேரியில் காங்கிரஸ் அரசின் சாதனை எனக் குறிப்பிட்டு தேர்தல் வாக்குறுதியில் நூற்றுக்கு பூஜ்யம் என்றும் வேலைவாய்ப்பு, சாலை வசதியில் நூற்றுக்கு பூஜ்யம் என 500க்கு மொத்தத்தில் பூஜ்யம் என மதிப்பெண் பெற்று உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதுவரை காங்கிரஸ் கட்சி கடந்த 4 ஆண்டுகளாக எந்த வித சலுகைகளையும் மக்களுக்கு செய்யவில்லை. இதுவே காங்கிரஸ் ஆட்சியின் 4 ஆண்டுகள் சாதனை என்ற பேனருடன் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பாஜக உறுப்பினர்கள் வந்தனர்.