பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இன்று பாஜகவினர் கொண்டாடிவருகின்றனர்.
மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்
திருவள்ளூர்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாஜகவினர் அன்னதானம் வழங்கினர்.
திருவள்ளூர் பாஜக நகர தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் , இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நகர செயலாளர் அமர்நாத் , நிர்வாகிகள், மாவட்ட பொதுச்செயலாளர், நகர துணைத்தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மணவாள நகரில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் மாவட்ட டிஎஸ்பி துரைப்பாண்டியன் கலந்துகொண்டார். பின்னர் அவர் மூலம் பாஜகவினர் சாலையில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினர்.