நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடமாடும் காட்டெருமைகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு, தேயிலை தோட்டங்களில் சர்வசாதாரணமாக உலவிவருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமானவர்களைத் தாக்கி உயிரிழப்பும் நேர்ந்துள்ளது.
இதனால் காட்டெருமைகளைக் கண்டாலே மக்கள் அச்சமடைந்து ஓட்டம்பிடித்து-வருகின்றனர். இந்நிலையில் வனப் பகுதியில் போதிய உணவு, தண்ணீர் இல்லாமல் குன்னூர் அருகே உள்ள கிருஷ்ணபுரம் பகுதியில் ஒற்றை காட்டெருமை பகல் நேரங்களிலேயே குடியிருப்புப் பகுதிக்குள் வலம்வருகிறது.