பிகார் மாநிலத்தின், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் குப்தா. 25 வயதான இவர் தொலைந்து போய் குடும்பத்தை பிரிந்திருந்து 14 ஆண்டுகள் கழித்து, தனது வீட்டிற்குத் திரும்பினார்.
இவரைப்பற்றி உள்ளூர் தலைவர் சத்ருகன் ராம் கூறுகையில் , "மனோஜ் குமார் குப்தா தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பைத்தேடி செகந்திராபாத் நகருக்குச் சென்றுள்ளார். ஆனால், முன்னேற்றம் இல்லாத சில சூழ்நிலை காரணமாக, அவர் அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்திற்கு குடிபெயர்ந்திருக்கிறார். தொடர்ந்து அங்கு அவர் பணிபுரிந்து வந்தார்.
அதோடு மனோஜ் தனது குடும்ப உறுப்பினர்கள் எவருடனும் தொடர்பு கொள்ளவில்லை.
ஆனால் தற்போது கரோனாவால் நாடு தழுவிய ஊரடங்கு மத்தியில், ஒருநாள் அவர் முகக்கவசம் அணியாமல் இருந்ததினால், காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு காவலில் இருந்துள்ளார். காவல் துறையினர் விசாரணையின் பின்னர், மனோஜ் தனது சொந்த ஊர் திரும்ப விரும்புவதாகத் தெரிவித்ததையடுத்து, அஸ்ஸாமைச் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை அணுகுவதற்கு காவலர் ஒருவர் உதவி செய்தார்.