பிகாரில் இடிதாக்கி 92 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்தது, இதில் அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இடி தாக்கி இறந்தவர்களில் பெரும்பாலோர் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
பிகாரில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இடிதாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.