அயர்லாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று டுப்லினில் நடைபெற்றது. ஆடுகளத்தின் வெளிப்புறம் ஈரப்பதத்துடன் இருந்ததால், ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 43.1 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
காத்திருந்து ஸ்டெம்பிங் செய்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர்! - ODI
அயர்லாந்து வீரர் ஆன்ட்ரு பால்பைர்னியை, இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் ஸ்டெம்பிங் செய்த காணொளி இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
இதனிடையே, ஜோ டென் வீசிய 25ஆவது ஓவரை அயர்லாந்து பேட்ஸ்மேன் ஆன்ட்ரு பால்பைர்னி எதிர்கொண்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயற்சித்து பந்தை மிஸ் செய்தார். இதைத் தொடர்ந்து, பந்தை பிடித்த இங்கிலாந்து அணியின் அறிமுக விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் சற்று காத்திருந்து, ஆன்ட்ரு பால்பைர்னி க்ரீஸை விட்டு காலை எடுத்த உடன் ஸ்டெம்பிங் செய்து அசத்தினார்.
விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாது, பென் ஃபோக்ஸ் பேட்டிங்கிலும் அசத்தினார். 76 பந்துகளை எதிர்கொண்ட அவர், மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 61 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றிபெற்றது. இதையடுத்து, பென் ஃபோக்ஸ், அயர்லாந்து வீரர் ஆன்ட்ரு பால்பைர்னியை ஸ்டெம்பிங் முறையில் அவுட் செய்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.