தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

தஞ்சாவூர்: கடன் தவணையை செலுத்த சொல்லி அடாவடி செய்த வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Bank EMI Issues In Thanjavur
Bank EMI Issues In Thanjavur

By

Published : Jun 16, 2020, 1:11 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள இரண்டாம்புலிக்காடு கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த வங்கியில்தான் பணப்பரிவர்த்தனை, நகை கடன் உள்ளிட்ட அனைத்து வரவு செலவுகளையும் செய்து வருகின்றனர் .

தற்போது, ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் சூழலில் வங்கி மேலாளர் கடன் தவணையை செலுத்த சொல்லி தொந்தரவு செய்வதாகவும் தகாத வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் வாடிக்கையாளர்களை துன்புறுத்தியதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில், அரசின் உத்தரவையும் மீறி சேமிப்பு கணக்குகள், மகளிர் சுய உதவி குழு கணக்குகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு கணக்குகள் என்று 500க்கும் மேற்பட்ட கணக்குள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. இதனால், குடும்ப செவுகளுக்கு வழியின்றி ஏழை மக்கள் தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக 30 பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த வங்கியின் முன் அமர்ந்து கைகளில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:உதவி காவல் ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details