தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா பாதிப்பு: பேண்ட் இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மனு!

திருநெல்வேலி: கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பேண்ட் இசை கலைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் இசை கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருநெல்வேலி பேண்ட் இசைக் கலைஞர்கள்
Thirunelveli band musicians

By

Published : Aug 4, 2020, 4:44 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில் கோயில் விழாக்கள், திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால், பேண்ட் இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பேண்ட் இசை கலைஞர்கள், ஊரடங்கு உத்தரவால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த இசை கலைஞர்களுக்கு பேரிடர் நிவாரணமாக மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.

பல்வேறு தொழில்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து செயல்படும் நிலையில் பேண்ட் இசை தொழிலுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டுமென இசை கருவிகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details