தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'மழை தீவிரமடைந்தால் ஆழியாறு அணை விரைவில் நிரம்பும்' -  பொதுப்பணித் துறை தகவல் - Azhiyar Dam to fill soon: Public Works Department Information

கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் பெய்த கனமழையால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் 99 அடியாக எட்டியதையடுத்து அணை விரைவில் நிரம்பும் என பொதுப்பணித் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Azhiyaar Dam
Azhiyaar Dam

By

Published : Aug 10, 2020, 9:50 PM IST

கடந்த சில நாள்களாக மேற்கு தொடர்ச்சி மலை வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளான அப்பர் ஆழியாறு, நவமலை, குரங்கு நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் பெய்த மழை நீர் காட்டாறு வெள்ளம் போல் ஆழியாறு அணைக்கு பாய்ந்தோடிவருகிறது.

கடந்த ஒரு வாரம் பெய்த மழையால் 68 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 22 அடி உயர்ந்து 99 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 2071 கனஅடி வீதம் உள்ளது. 53 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை தீவிரமடைந்தால் அணையின் மொத்த உயரமான 120 அடியை இன்னும் ஒருசில நாள்களில் எட்டும் என பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details