தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஓப்பனிங்லாம் நல்லாதான் இருக்கு - ஆனா ஃபினிஷிங் சரியில்லையே! - Warner

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆஸியுடன் தோல்வி அடைந்த இலங்கை!

By

Published : Jun 16, 2019, 7:35 AM IST

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20ஆவது லீக் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக, அந்த அணியின் கேப்டன் ஃபின்ச் 153 ரன்களை விளாசினார். இலங்கை அணி தரப்பில் உடானா, தனஞ்செயா டி சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, 335 ரன்கள் இலக்குடன் ஆடிய இலங்கை அணிக்கு, கேப்டன் திமுத் கருணரத்னே, குஷால் பெரெரா ஆகியோர் நல்ல தொடக்கத்தைத் தந்தனர். மிட்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ், ஜெசன் பெஹ்ரன்டார்ஃப் என மிரட்டலான பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர்.

இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 115 ரன்களை சேர்த்த நிலையில், குஷால் பெரெரா 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, திரிமான்னே 16 ரன்களுடன் நடையைக் கட்டினாலும், மறுமுனையில், கேப்டன் கருணரத்னே சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார்.108 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேன் ரிச்சர்ட்சனின் பந்துவீச்சில் அவர் அவுட் ஆனார். இதனால், இலங்கை அணி 32.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து 186 ரன்களை எடுத்திருந்தது.

97 ரன்கள் அடித்த இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே

அவரைத் தொடர்ந்து வந்த சக வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் நான்கு, ரிச்சர்ட்சன் மூன்று, கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இவர்களது ஆட்டத்தைக் கண்ட நெட்டிசன்கள், 'ஓப்பனிங்லாம் நல்லதான் இருக்கு - ஆனா ஃபினிஷிங் சரியில்லையே' என கலாய்த்து வருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details