இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு கல்வி பாடத் திட்டத்தில் 10, 11ஆம் வகுப்பு, கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு குறித்து தவறாக வெளிவந்துள்ளது.
அய்யாவைகுண்டர் குறித்த தவறான தகவலை நீக்கக்கோரி கவன ஈர்ப்பு போராட்டம் - Attention struggle
கன்னியாகுமரி: 10, 11ஆம் வகுப்பு, கல்லூரி பாடங்களில் அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு குறித்து தவறாக வெளிவந்துள்ள பாடத்தை முற்றிலும் நீக்க வலியுறுத்தி அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆட்சியர் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
கவன ஈர்ப்பு போராட்டம்
இந்த பாடத்தை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும். இந்த ஆண்டு நீக்க முடியாவிட்டால் அந்த பாடங்களை மறைக்க வேண்டும் என்றனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.