சென்னையில் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் நரசிம்ம மூர்த்தி (56). இவர் மனைவி, மகளுடன் கீழ்ப்பாக்கம் காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இவருடைய மகளுக்கு திருமணம் ஆனதால், நரசிம்ம மூர்த்தி அயப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் மனைவியுடன் தங்கி வந்தார்.
இந்நிலையில், அவருக்கு சிறுநீரக கோளாறு பிரச்னை இருந்ததால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். மது அருந்தக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியும் நரசிம்ம மூர்த்தி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.