ஐரோப்பிய யூரோப்பா லீக் கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், ஆர்சனல் (இங்கிலாந்து), வெலன்சியா (ஸ்பெயின்) அணிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டி, வெலன்சியா அணியின் சொந்த மைதானமான மெஸ்டாலாவில் (Mestalla) நேற்று நடைபெற்றது.
யூரோப்பா கால்பந்து: வெலன்சியாவை காலி செய்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சனல் - Valencia
ஐரோப்பிய யூரோப்பா கால்பந்து தொடரில், ஆர்சனல் அணி 7-3 என்ற கோல் அடிப்படையில் வெலன்சியா அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சனல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆர்சனல் அணி தரப்பில் அபுமெயங் ஹாட்ரிக் கோல் அடித்தார். முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையே, எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதிப் போட்டியில், ஆர்சனல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதன் மூலம், ஆர்சனல் அணி 7-3 என்ற கோல் அடிப்படையில் வெலன்சியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து, மே 29ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் செல்சி அணியை, ஆர்சனல் அணி எதிர்கொள்கிறது.