தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரசு சார்பில் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா- அமைச்சர் ராதாகிருஷ்ணன்

கோவை:  பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறிய கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆசிரியப் பெருமக்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தி கௌரவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா- அமைச்சர் ராதாகிருஷ்ணன்
அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா- அமைச்சர் ராதாகிருஷ்ணன்

By

Published : Jul 17, 2020, 5:31 AM IST

கோவை மாவட்டம், உடுமலை சட்டப்பேரவை தொகுதி, பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலனூர், ஆவலப்பம்பட்டி, பூசாரிபட்டி பகுதிகளில் அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத் திறப்பு விழா, இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிகளில் கால்நடைத்துறை அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது, 'தமிழ்நாட்டி இரண்டாவது முறையாக பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அதற்காக மாணவ - மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், கல்வித் துறை அலுவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், கடந்த முறை முதலிடம் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில் பரிசு கோப்பைகள் வழங்கினார்.

அதேபோல் இவ்வருடமும் அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரையும் பாராட்டி, கெளரவிப்போம் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details