தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

துணை ஆட்சியர் பணி நியமனம் - தமிழ்நாடு அரசு ஆணை! - தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை : இந்திய குடிமைப்பணி சார்ந்த 26 துணை ஆட்சியர் நிலையில் மாறுதல் மற்றும் பணி நியமனம் செய்யும் ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

துணை ஆட்சியர் பணி நியமனம் - தமிழ்நாடு அரசு ஆணை!
துணை ஆட்சியர் பணி நியமனம் - தமிழ்நாடு அரசு ஆணை!

By

Published : Jul 1, 2020, 2:50 PM IST

தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், பொதுமக்களுக்கும் பாலமாகச் செயல்படும் துணை ஆட்சியர் நிலையிலான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழ்நாடு வருவாய்த் துறைச் செயலர் உள்ளிட்டோரை தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப் - 2 நேரடி நியமன அலுவலர் சங்கம், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம், தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று இந்திய குடிமைப்பணி சார்ந்த 26 துணை ஆட்சியர் நிலையில் மாறுதல் மற்றும் பணி நியமனம் செய்யும் ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

துணை ஆட்சியர் நிலையில் உள்ள வருவாய்த் துறையில் வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர், கலால் உதவி ஆணையர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர், மாநகராட்சி உதவி ஆணையர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 26 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக இந்தப் பட்டியலில் இடம்பெற்ற 26 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றன.

அதில்,

1. தே. இளவரசி

(மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், ராணிப்பேட்டை)

2. தெ. சங்கீதா

(மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், விருதுநகர்)

3. செ. இலக்கியா

(மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், திருவள்ளூர்)

4. ரா. மந்தாகினி

(தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம், திருவண்ணாமலை)

5. ச. பிரபாகரன்

(மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், தேனி)

அரசுத் துறைகளில் உள்ள அலுவலர்களுக்கு இல்லாத அதிகபட்ச அதிகாரம், துணை ஆட்சியருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details