தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. நோய்ப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும், அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கவசம் அணிந்து வெளியில் வருகின்றனர்.
அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு முகக்கவசம் அணிவிப்பு! - பேரறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் திருவுருவ சிலை
கோவை: நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் முகக்கவசம் அணிவித்துள்ளனர்.
அன்பின் மிகுதியால் அண்ணா, எம்ஜிஆர் சிலைக்கு முக கவசம் அணிவித்த நபர்கள்!
இந்நிலையில் கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ள அண்ணா, எம்ஜிஆர் திருவுருவச் சிலைகளுக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் முகக்கவசம் அணிவித்துச் சென்றுள்ளனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த முகக்கவசங்களை அகற்றினர்.