அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுகவினர் சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செய்ய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் கங்கை அமரன் ஆகியோர் கலந்துகொண்டு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியுடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.