வால்பாறையில் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலாவருகிறது. தற்போது சாலையில் ஆள் நடமாட்டம் , வாகன போக்குவரத்து குறைவாக உள்ளது.
வால்பாறையில் சாலையோரம் உலாவரும் கடமான் - kovai district News
கோவை: சாலையோரம் உலாவரும் கடமானை விபத்துகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்து வனத் துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டுவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
![வால்பாறையில் சாலையோரம் உலாவரும் கடமான் Animal movement inside town](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-animal-movement-valparai-1-1706newsroom-1592358868-310.jpg)
Animal movement inside town
இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஸ்டாண்மோர் எஸ்டேட் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பாலத்தின் அருகில் ஒரு கடமான் போக்குவரத்தின் பிரதான சாலையில் எந்தவித அச்சமும் இன்றி நடமாடிவருகிறது.
இதனைக் கண்ட பொதுமக்கள் அதற்கு மாம்பழம், இதர பழ வகைகளைக் கொடுத்து இயல்பாகப் பழகிவருகிறார்கள். இதனால் சாலையில் வாகனங்கள் செல்லும்போது விபத்துகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்து வனத் துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டுவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.