இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடரின் 27ஆவது லீக் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
CWC19: இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறிய இலங்கை - உலகக்கோப்பை
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்களை மட்டுமே எடுத்தது.
CWC19: இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறிய இலங்கை
இருப்பினும், மறுமுனையில் மனம்தளராமல் இருந்த மேத்யூஸ் ஆட்டத்தின் சூழலுக்குஏற்ப சிறப்பாக ஆடினார். இவரது உதவியால் இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. மேத்யூஸ் 115 பந்துகளில் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சர் என 85 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.