தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

விவாகரத்து குறித்து மனம்திறந்த ஏஞ்சலினா ஜோலி! - ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து

வாஷிங்டன்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட் உடனான விவாகரத்து குறித்து இப்போது மனம் திறந்துள்ளார். அது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

angelina jolie
angelina jolie

By

Published : Jun 20, 2020, 5:30 PM IST

ஹாலிவுட் உலகில் நட்சத்திர தம்பதியாக திகழ்ந்த பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி 2004ஆம் ஆண்டு முதல் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தனர். தெதாடர்ந்து, அவர்கள் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2016ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்தனர். இது அனைவரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

தனது விவாகரத்து குறித்து ஏஞ்சலினா ஜோலி இதுவரை பொது வெளியில் எதுவும் கூறியதில்லை. ஆனால் இப்போது முதல் முறையாக தனது விவாகரத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.

விவாகரத்து குறித்து வோக் பத்திரிக்கைக்கு ஏஞ்சலினா ஜோலி அளித்த பேட்டியில், "எனது குடும்பத்தின் நலன் கருதியே நான் விவாகரத்து முடிவை எடுத்தேன், அது சரியான முடிவு. அதிலிருந்து மீண்டு வர நான் இன்னும் கவனம் செலுத்துகிறேன்.

எனது மௌனத்தை அவர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டனர். என் குழந்தைகள் தங்களைப் பற்றிய பொய்களை ஊடகங்களில் காண்கிறார்கள். அப்போது அவர்களிடம் உண்மை என்ன என்பது உங்களுக்கு தெரியும் என்று ஆறுதல் கூறுகிவேன். உண்மையில், அவர்கள் துணிச்சலானவர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக உடல் மற்றும் மனரீதியாக பல பிரச்னைகளை எதிர்கொண்டேன். கடந்த பத்தாண்டுகளில், குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் என் உடலில் நிறைய காணக்கூடிய மற்றும் கண்ணுக்குத் தெரியாத தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

கண்ணுக்குத் தெரியாத தழும்புகள் ஏற்படுத்தும் வலியை கையாள்வது கடினம் "என்று அவர் மேலும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details