தமிழ்நாடு

tamil nadu

கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்: மருத்துவமனை செல்ல அதிக பணம் கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்!

கொல்கத்தா: கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசர ஊரதி வாகன ஓட்டுநர் அதிக அளவு பணம் கேட்டுள்ளார்.

By

Published : Jul 26, 2020, 3:12 PM IST

Published : Jul 26, 2020, 3:12 PM IST

கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்: மருத்துவமனை செல்ல அதிக பணம் கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்!
Corona cases in Kolkata

கொல்கத்தா மாநிலம் ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மாத குழந்தை, 9 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐ.சி.எச் குழந்தைகள் சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

இந்நிலையில், சிறுவர்களை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறுவர்களின் தந்தை அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவுசெய்தார்.

பின்னர், சிறுவர்கள் அவரது தாயார் ஆகியோர் அவசர ஊர்தியில் ஏறிய நிலையில் வாகன ஓட்டுநர் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு செல்ல 9ஆயிரத்து 200 ரூபாய் கேட்டுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை பணம் இல்லை எனக் கூறி கெஞ்சியுள்ளார்.

ஆனால், வாகன ஓட்டுநர் இதனை பொருட்படுத்தாமல் உள்ளே இருந்த சிறுவர்கள், தாயாரை வாகனத்தைவிட்டு இறங்குமாறு கூறியுள்ளார். இதனால், செய்வதறியாமல் திகைத்துநின்றபோது ஐ.சி.எச் மருத்துவர்கள் தங்களது பேச்சுவார்த்தையால் 2ஆயிரம் ரூபாய் தருவதாக முடிவுசெய்தனர்.

இது குறித்து சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில், "ஐ.சி.எச் மருத்துவமனையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு என் மகன்களை அழைத்துச்செல்ல வாகன ஓட்டுநர் ரூ 9,200 கேட்டார்.

நான் அவரிடம் பணம் செலுத்த முடியாது என்று சொன்னேன், அவரிடம் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தேன், ஆனால் அவர் எந்த கவனமும் செலுத்தவில்லை” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details