தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் கரோனா தொற்றால் இதுவரை சுமார் 120க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் வருகின்றனர். மேலும், இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கம்பம் நகராட்சி ஆணையாளர் தலைமையில், சுகாதாரம், வருவாய், காவல் துறையினர் ஆகியோர் வணிகர்களுடன் நேற்று (ஜூலை 9) ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், கம்பம் நகராட்சிப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் விற்பனையகங்கள், ஏடிஎம் உள்ளிட்டவைகளைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கடைகளும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.