கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் கடைகளைத் திறக்கும் நேரத்தை குறைத்து கொண்டுள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்க மயிலாடுதுறையில் முழு கடையடைப்பு - கடைகள் அனைத்து அடைப்பு
நாகப்பட்டினம்: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மயிலாடுதுறையில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
அந்த வகையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை வணிகர் சங்கம் சார்பில் இன்று மற்றும் ஜூன் 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் முழு அடைப்பும், மற்ற நாள்களில் வரும் 30ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு கடைகளை மூடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற முழு கடையடைப்பு மற்றும் சூரிய கிரகணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியதால் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஏராளமான பேருந்துகள் பயணிகள் இல்லாமல் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.