உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த மோட்டார் மெக்கானிக்கின் மகன் ஷதாப், இவர் அரசிடம் இருந்து உதவித்தொகை பெற்று அமெரிக்கா சென்று பயின்றுவருகிறார். இந்நிலையில், 800 மாணவர்களில் ஷதாப் தனது பள்ளியில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மோட்டார் முகமது ஷதாப், "கடந்தாண்டு கென்னடி-லுகர் இளைஞர் பராமரிப்பு உதவித்தொகை ரூ.20 லட்சம் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பெற்றேன். இதைத் தொடர்ந்து, எனது உயர்நிலைப் பள்ளி கல்வியைத் தொடர அமெரிக்கா சென்றேன்
உயர்நிலைப் பள்ளியில் முதலிடம் பெற நான் மிகவும் கடினமாக உழைத்தேன். எனது வீட்டின் பொருளாதார சூழல் நல்ல நிலையில் இல்லை. எனது பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நான் முதலிடம் பிடித்துள்ளேன். இந்த உதவித்தொகைக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு இந்திய அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்" எனத் தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக மோட்டார் மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் ஷதாப்பின் தந்தை அர்ஷத் நூர், "நாங்கள் அவரை கல்விக்காக அமெரிக்காவிற்கு அனுப்பியிருந்தோம், அவர் பள்ளியில் முதலிடம் பிடித்ததில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறினார்.
மேலும் அவர், "எனது மகன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்" என்று கூறினார். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை அலுவலராக பணியாற்ற விருப்புவதாக ஷதாப் தெரிவித்துள்ளார்.