போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் டாப் 100 பட்டியலை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் முதல் மே 2020வரை அதிகம் சம்பாதித்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அக்ஷய் குமாரின் ஒரு வருட சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Akshay Kumar movie list
நடிகர் அக்ஷய் குமாரின் ஒரு வருட சம்பளம் எவ்வளவு என்பதை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
அக்ஷய் குமார்
அப்பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்கிற பெருமையை நடிகர் அக்ஷய் குமார் பெற்றுள்ளார். உலக அளவில் 52ஆவது இடத்தைப் பிடித்துள்ள இவர், ஜூன் 2019 முதல் மே 2020வரை, இந்திய ருபாய் மதிப்பில் சுமார் 366 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.
சென்ற வருடம் அவர் 33ஆவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் அவர் 19 இடங்கள் பின்தங்கி 52ஆவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.