பரவிவரும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அயராது பாடுபடும் இவர்களின் சேவையை பாராட்டும் வகையில் டீ சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 'ராக் து ஹஸ்லா' (Rakh Tu Hausla) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் மும்பை சுற்றுவட்டாரப் பகுதிகள் மொத்தமும் காண்பிக்கப்பட்டுள்ளன.