ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தகுந்த இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட அதிமுக! - தகுந்த இடைவெளி
ராமநாதபுரம்: அதிமுக தொழில் நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் தகுந்த இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டடுள்ளது.
இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, பரமக்குடி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சதன்பிரபாகர் தலைமை தாங்கினார். கரோனா அச்சுறுத்தல் முடியாத நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்து உள்ளது.
ஆனால், தகுந்த இடைவெளியை கருத்தில் கொள்ளாமல் இந்த கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பரமக்குடி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சதன்பிரபாகரன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.