தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருச்சியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்! - அதிமுக உறுப்பினர்

திருச்சி: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது.

AIADMK Members Joining Camp In Trichy
AIADMK Members Joining Camp In Trichy

By

Published : Sep 24, 2020, 10:44 PM IST

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருபைஞ்சீலி கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமில் அமைச்சர் வளர்மதி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி ஆகியோர் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர் ஆதாளி, அவைத் தலைவர் ராஜகோபால், துணைச் செயலாளர் சித்ரா பாலு, திருபைஞ்சீலி ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, முசிறி ஒன்றியம் குணசீலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அமைச்சர் வளர்மதி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி ஆகியோர் கலந்துகொண்டு புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினர்.

அதில், முசிறி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெயராமன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யநாராயணா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆமூர் சுரேஷ், சித்தாம்பூர் கூட்டுறவு சங்க இயக்குநர் துரை சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details