தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவி விலக வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - வனத்துறையில் ஊழல் முறைகேடு

திருப்பூர்: வனத்துறையில் பல்வேறு ஊழல் முறைகேடு, நடந்துள்ளதாகக் கூறி தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவி விலக வலியுறுத்தி கிராமப்புற விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் சமூக இடைவெளியைப் பின்பற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவி விலக வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவி விலக வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 26, 2020, 7:15 PM IST

தமிழ்நாட்டில் உள்ள காப்பு காடுகளில் வன விலங்குகளின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ஜெ.ஜெ தொட்டி கட்டப்பட்டது. சுமார் 100 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்தத் தொட்டிகள் தற்போது கடந்த பல ஆண்டுகளாகவே தண்ணீர் இல்லாமல், வறண்ட நிலையில் காட்சியளிக்கின்றன.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை மானியத்தின்போது, இந்தத் தொட்டிகளை பராமரிப்பதற்கான செலவு ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில் வனத்துறையின் மூலம் இந்தத் தொட்டி சரியாகப் பராமரிக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே இருந்து வருவதால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராமங்களிலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் செல்கிறது.

மேலும் சாலையைக் கடந்து தண்ணீருக்காக அலைவதால், வனவிலங்குகள் வாகன விபத்தில் உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது. மேலும் சாலையோரம் ஒரு லட்சத்திற்கும் மேலாக மரக்கன்றுகள் நடப்பட்டு, அதைப் பராமரிப்பதற்காக வனத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது.

ஆனால், மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுவதில்லை. அதிலும் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக்கோரி, அகில இந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலகம் முன்பு, வனத்துறை முறைகேடுகளை கண்டுகொள்ளாத வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, சமூக இடைவெளியைப் பின்பற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details